என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, September 03, 2016

2 குற்றமே தண்டனை- ஒரு புது முயற்சிடனல் விஷன் என்னும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர் விதார்த். அதென்ன டனல் விஷன் என்றால் நமக்கு முழுமையாக தெரியும் ஒரு விஷயம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுருங்கி சின்ன ஓட்டை வழியே பார்ப்பதுபோல் தெரியும். கண்ணுக்கு நேராக இருப்பதுதான் தெரியும். பக்கவாட்டில் என்ன நடந்தாலும் தெரியாது. அப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர் ஹீரோ என்று முதல் காட்சியிலேயே ஒரு பைப் வழியாக பார்த்தால் எப்படி தெரியுமோ அப்படி தெரிவதுபோல் ஹீரோ பார்க்கும் காட்சியை வைத்ததன்மூலம் புரிய வைத்துவிடுகிறார் இயக்குநர்.
விதார்த் வசிக்கும் அபார்ட்மெண்டின் எதிர் ரூமில் இருக்கும் ஐஸ்வர்யா வீட்டிற்கு அடிக்கடி அவரின் முதலாளி ரகுமானும், காதலரும் வந்துபோகிறார்கள். ஒருநாள் மாலை அந்த வீட்டிலிருந்து ஐஸ்வர்யாவின் காதலர் வேகமாக வெளியேறுகிறார். சில மணி நேரங்களுக்கு பிறகு வீட்டிற்குள் சந்தேகப்படும்படியாக ரகுமான் நிற்பதை பார்த்து அங்கே போகும் விதார்த் உள்ளே ஐஸ்வர்யா கொல்லப்பட்டிருப்பதை பார்த்து அதிர்கிறார். ஆனால் ரகுமானோ நான் கொல்லவில்லை என்று சொல்கிறார். அவரை யார் கொன்றது? அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துவிட்டு போன ஐஸ்வர்யாவின் காதலரா? அல்லது ரகுமானா? அல்லது வேறு யாரோவா? என்று பரபரப்பாய் அதே நேரம் ஸ்லோவாக படம் நகர்கிறது.
தன் கண் அறுவை சிகிச்சைக்கு சில லட்சங்கள் தேவைப்படும் நிலையில் இந்த கொலையை பயன்படுத்தி ரகுமானிடமும், ஐஸ்வர்யாவின் காதலர் தரப்பிடமும் எப்படியெல்லாம் காசு பார்க்கிறார். பின்னர் எப்படி சிக்கலை சமாளிக்கிறார் என்று நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு கொலை மூலம் யார் பாதிக்கப்படுகிறார்கள், யார் தண்டிக்கப்படுகிறார்கள், யார் ஆதாயம் அடைகிறார்கள் என்று சொல்வதைவிட ஒரு குற்றம் மூலம் ஒருவரின் மனசாட்சி என்ன தண்டனை கொடுக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
பாடல்கள் இல்லை. சண்டைகள் இல்லை, காமெடி இல்லை. இப்படி நிறைய இல்லைகள். ஆனாலும் நிச்சயமாக தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம் என்று சொல்லும் அளவுக்கான கதை. வித்தியாசமான முயற்சி என்றும் சொல்லலாம். க்ளைமேக்ஸ் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது என்பது தவிர சொல்லிக்கொள்ளும்படி குறையில்லை.
இளையராஜாவின் பின்னணி இசையும், மணிகண்டனின் ஒளிப்பதிவும் மிகப்பெரிய ப்ளஸ்.
இது எல்லோருக்குமான சினிமா இல்லை. ஏ செண்டர் ரசிகர்களுக்கானது. அப்படி சொல்லும் அளவுக்குத்தான் அதன் காட்சியமைப்பு உள்ளது. க்ளைமேக்சை இன்னும் கொஞ்சம் தெளிவாக அமைத்திருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படமாக அமைந்திருக்கலாம்.
மற்றபடி குற்றமே தண்டனை பார்க்கும் ரசிகர்களுக்கு தண்டனையும் அல்ல, பார்ப்பது குற்றமும் அல்ல. ஒரு புது முயற்சி
44/100.


Post Comment

இதையும் படிக்கலாமே:


2 comments:

  1. படம் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க...
    நல்ல விமர்சனம்.
    பார்க்கணும்.

    ReplyDelete
  2. விமர்சனப் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.